தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

செவ்வாய்

அரசியலுக்காக ஈமானை இழக்காதீர்.

அன்புள்ள சமுதாயச் சொந்தங்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...
இது தேர்தல் காலம். ஓட்டுக்காக அரசியல்வாதிகள் விதவிதமான வாக்குறுதிகளையும் வித்தியாசமான செயல்களையும் செய்யும் நேரம். ஆனால் ஒரு முஸ்லிம் அரசியலில் இறங்கி பதவியை பெறுவதற்காக இத்தகைய செயல்களை செய்யலாமா என்பதே நம்முன் உள்ள கேள்வி.
ஏனெனில் பதவியை பெறும் ஆவலில் ( இதனால் சமுதாயத்திற்கு நன்மை கிடைத்தாலும் கூட) தங்களுடைய ஈமானை தங்களை அறியாமலேயே இழந்து மறுமையில் சிறந்த பதவியான சொர்கத்தை இழந்து விடுகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுசெயலாளர் பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் ஒரு சாமியாரிடம் சென்று ஓட்டுக்காக ஆசி வாங்கி விட்டு வந்தார். இதை அனைவரும் கண்டித்தோம். தமுமுகவினர் மிக மிக கடுமையாக கண்டித்தனர். தங்களுடைய மேடைகளிலும் இணைய தளங்களின் வாயிலாகவும் இந்த ஆசி வாங்கும் செயலை கண்டித்தனர். இத்தகைய கண்டனங்கள் அவரை திருத்தும் என்று நம்பியே அனைவரும் செய்தோம்.

பேராசிரியர் காதர் முகைதீன் அவர்களை இத்தகைய செயல்களுக்காக கண்டித்த தமுமுகவினர் தம்முடைய தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் இதை போன்று ஓட்டுக்காக திருவாவடுதுறை ஆதீனம் அவர்களிடம் அருளாசி வாங்கியதை ஏன் கண்டிக்கவில்லை? பேராசிரியர் காதர் முகைதீன் அவர்களுக்கு ஒரு நியாயம் தம்முடைய தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு ஒரு நியாயமா? காதர் முகைதீன் அவர்கள் குனிந்து ஆசி வாங்கினார். ஜவாஹிருல்லாஹ் நின்று கொண்டு வாங்கினார். வேறு என்ன வித்தியாசம் இதில் இருக்கிறது? நாம் ஆசி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செல்லா விட்டாலும் அந்த இடத்திற்கு சென்றால் ஆசி கிடைக்கும் அவர் ஆசி தருவார் என்ற நிலை இருக்கும் போது அங்கு செல்லாமல் இருப்பதே நல்லது. அவர் மடம் சார்ந்த ஓட்டுக்கள் கிடைக்கும் என்பதற்காக அந்த இடத்திற்கு செல்வது ஓட்டுக்களை வேண்டுமானால் பெற்று தரும். ஆனால் ஈமானை பறித்து விடும் என்பதை அறியாதவரா பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள்.


<><><><><><><><><><><><>






இதைபோல தமுமுக பொதுசெயலாளர் ஹைதர் அலி அவர்கள் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து தம்முடைய ஆதரவை தெரிவித்துவிட்டு வந்திருக்கிறார். எந்த ஒரு உணர்ச்சியுள்ள முஸ்லிமும் விடுதலைப்புலிகளை ஒருக்காலும் ஆதரிக்க மாட்டான். எவ்வாறு இந்தியாவில் சங்பரிவார் கும்பல்கள் முஸ்லிம்களை அழித்தொழிப்பதையே நோக்கமாக வைத்திருக்கிறதோ அதைப்போல இலங்கையில் முஸ்லிம்களை படுகொலை செய்வதையே தம்முடைய ஒரு நோக்கமாக வைத்திருக்கும் அமைப்பு விடுதலைப்புலிகள் என்னும் அமைப்பு. அந்த அமைப்பினால் பள்ளிவாசலில் வைத்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். எனவே அந்த அமைப்பை ஆதரித்து நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட ஹைதர் அலி அவர்கள் எந்த அடிப்படையில் கலந்து கொண்டார்.

சாக்கடையை சந்தனமாக்குவேன் என்று புறப்பட்ட ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான தமுமுக வினரும் முஸ்லிம் லீகினரை போல சாக்கடையாக மாறி விட்டனர்.