தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

செவ்வாய்

விஜய் டிவி நிறுவனத்தாருக்கு TNTJ வின் கண்டன கடிதம்

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிவரும், ”மகான்” என்ற தொடரில் இடம்பெறும் பாடலில் முஸ்லிம்கள் தங்களது உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஒரு பாடல் வரி இடம்பெறுவதாக தெரியவந்ததை தொடர்ந்து விஜய் டிவி நிறுவனத்தாருக்கு டி.என்.டி.ஜே இன்று (07.02.11) கண்டன கடிதம் எழுதியதியதோடு நேரில் சென்று உடனடியாக அந்த கண்டனத்திற்குரிய வரிகளை நீக்குமாறு டி.என்.டி.ஜே நேரில் வலியுறுத்தியது.
அதைத் தொடர்ந்து அந்த கண்டனத்திற்குரிய வரியை 09.02.11 அன்று முதல் நீக்கிவிடுவதாக விஜய் டிவி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.