தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

செவ்வாய்

தொழுகையில் தடுப்பு வைத்தல்

நம்மில் சிலர்  தொழும் போது தடுப்பு வைக்காமல் தொழுகின்றனர். பள்ளிகளில் தடுப்பு வைக்காமல் தொழும் போது கவனிக்காமல் தொழுபவருக்கு குறுக்கே கடந்து சென்று சிலர் பாவத்தையும் சம்பாதிக்க வேண்டிய நிலை உள்ளது. அதைவிட பெரும்பாலோர் தடுப்பு வைப்பதை கண்டு கொள்ளளாமல் சதாரணமாக விட்டுவிடுகின்றனர். இது சுன்னத் தானே என்று நபிவழயை கவனிக்கத் தவறியதின் விளைவு இது. ஆனால் இதை வ­யுறுத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாயிலாக பல்வேறு செய்திகள் உள்ளன. அவைகளை உங்களித்தில் வைக்கிறோம்.
தொழுபவருக்கு குறுக்கே செல்பவரின் பாவம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
தொழுபவருக்கு குறுக்கே கடந்து செல்பவர் கடந்து செல்வதில் உள்ளதை (பாவத்தை ) அறிந்திருந்தால் அவ்வாறு செய்வதை விட நாற்பது நாட்கள் அல்லது நாற்பது மாதங்கள் அல்லது வருடங்கள் நிற்பது அவருக்கு சிறந்ததாக இருந்திருக்கும். அறிவிப்பவர் : அபூ ஜ‚ஹைம் (ர­)நூல் : புகாரி 510 முஸ்­ம் 785

இந்த செய்தியை அறிவிக்கும் மூன்றாவது அறிவிப்பாளரான அபூ ஜ‚ஹைம் என்பவர் நாற்பது நாட்களா நாற்பது மாதங்களா நாற்பது வருடங்களா என்பதை சந்தேகமாக அறிவிக்கிறார்.
நாம் தடுப்பு வைக்காமல் தொழுது இந்த அளவுக்கு பாவத்தை சம்பாதித்தற்கு காரணமாகிவிடுவோம். நாற்பது வருடங்களாகட்டும் நாற்பது மாதங்களாகட்டும் நாற்பது நாட்களாகட்டும் இந்த காலங்களில் நிற்பது என்பது சாதரண காரியமா? இதை விட ஒரு பெரிய  பாவத்திற்குரிய செயல் என்றால் தடுப்பு வைப்பதின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ளலாம். இது தடுப்பை கடந்து செல்பவருக்குரிய குற்றம்.
தனியாகநின்று தொழும் போது தடுப்பு மிகவும் அவசியம்
அபூ தல்ஹா (ர­) அவர்கள் கூறுகிறார்கள்:
நாங்கள் தொழுது கொண்டிருக்கும் போது எங்களுக்கு முன்னால் கால்நடைகள் சென்று கொண்டிருந்தது. இதனை நபி (ஸல்) அவர்களிடத்தில் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களில் ஒருவர் (தொழும் போது) தனக்கு முன்னால் ஒட்டகத்தின் மேல் வைக்கப்படும் சாய்மானத்தின் குச்சியை போன்றது இருந்தால் தனக்கு முன்னால் கடந்து செல்வதால் எந்த இடையூறும் ஏற்படாது.
நூல் : முஸ்­ம் 770
முஸ்­மின் 769 வது அறிவிப்பில் கடந்து செல்பவரால் எந்த இடையூறும் ஏற்படாது என்று வந்துள்ளது.
தடுப்புக்கும் தொழுகையில் நிற்பவருக்கும் உள்ள இடைவெளி
சிலர் தடுப்பு என்பது வெட்ட வெளியில் தொழும் போது மட்டும் தான் வைத்து கொள்ள வேண்டும். என்ற தவறாக விளங்கி வீடுகளிலும் பள்ளிகளிலும் சுற்று சுவர் தடுப்பாக உள்ளது என்பதால் தடுப்பே இல்லாமல் பரந்த இடைவெளி விட்டு  தொழுவதை பார்க்கிறோம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தடுப்பு வைப்பதற்குள்ள இடைவெளியின் அளவையும் நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளார்கள்.
ஸஹ்ல் இப்னு ஸஃத் (ர­) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (நின்று) தொழம் இடத்திற்கும் தடுப்புச் சுவருக்கும் இடையே ஒரு ஆட்டுக் குட்டி கடந்து செல்லக்கூடிய தொலைவு இருக்கும்.
நூல் : புகாரி 496
தடுப்பு வைத்து தொழும் போது தடுப்புக்கிடையே ஒருவர் கடந்து சென்றால் ?
தடுப்பு வைத்து தொழும் போது தடுப்புக்குள் ஒருவர் கடக்க முயன்றால் அவருடைய குரல்வலையை தடுக்க வேண்டும்.
நான் அபூ ஸயீத் குத்ரீ (ர­)  அவர்களுடன் இருக்கும் போது ஜ‚ம் ஆ நாளில் மக்களிடமிருந்து தடுத்துக் கொள்வதற்காக ஒரு தடுப்பை ஏற்படுத்தி கொண்டு தொழதார்கள். அப்போது  அபூ முயீத் குலத்தை சேர்ந்த ஒருவர் வந்தார். அபூ ஸயீத் (ர­) அவர்களின் குறுக்கே கடக்க முயன்ற போது அபூ ஸயீத் (ர­) அவர்கள் அவருடைய குரல்வலையை தடுத்தார்கள். அப்போது அவர் பார்த்தார். அபூ ஸயீத் (ர­) அவர்களை கடந்து செல்வதை தவிர வேறு வழி அவருக்கு கிடைக்கவில்லை. மீண்டும் கடந்து செல்ல முயன்றார். அபூ ஸயீத் (ர­) அவர்கள் முத­ல் தடுத்ததை விட கடுமையாக தடுத்தார்கள். அவர் அப்படியே நின்றார். அபூ ஸயீதை திட்டினார். பிறகு மக்களுக்கு நெருக்கடிக்குள்ளாக்கி வெளியேறினார். மர்வானிடத்தில் சென்று தான் சந்தித்து பற்றி முறையிட்டார். அபூ ஸயீத் (ர­) அவர்களும் மர்வானிடத்தில் வந்தார்கள். அப்போது உங்களுக்கும் உங்களின் சகோதரர் மகனுக்கும் என்ன பிரச்சனை? அவர் உங்களை பற்றி புகார் செய்கிறாரே? என்று அபூ ஸயீத் (ர­) அவர்களிடம் மர்வான் கேட்டார். அதற்கு அபூ ஸயீத் (ர­) அவர்கள் உங்களை ஒருவர் மக்களிடமிருந்து தன்னை தடுத்துக் கொள்வதற்காக ஒரு தடுப்பை தொழும் போது ஒருவர் அந்த தடுப்புக் கிடையில் கடக்க முயல்கிறார் அப்போது அவர் அவரின் குரல்வலையில் தடுக்கட்டும். அவர் மறுத்தால் அவருடன் சண்டையிடட்டும். ஏனென்றால் அவர் ஷைத்தான். என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதை செவியுற்றிருக்கிறேன். என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸா­ஹ் அஸ்ஸமான்
நூல் : முஸ்­ம் 783
புகாரியின் 3275 ஆவது அறிவிப்பில் இரண்டு தடுத்து அதை மீறியும் கடக்க முயன்றால் அவருடன் சண்டையிடட்டும் என்ற கருத்தில் வருகிறது.
தடுப்பு வைக்கப்படும் பொருட்கள்
நபி (ஸல்) அவர்கள் தடுப்பு வைப்பதற்கு சாய்மானத்தின் பின்னால் இருக்கின்ற குச்சியை போன்ற ஒரு பொருள் இருந்தால் போதும் என்ற வரையை காண்பித்துள்ளார்கள். எனவே தடுப்பு வைப்பதற்கு ஒரு பொருள் அவசியமாக இருக்க வேண்டும். என்பது விளங்குகிறது. நபி (ஸல்) அவர்கள் பல்வேறு பொருட்களை தடுப்பாக ஆக்கியுள்ளார்கள்..
வாகனத்தை தடுப்பாக்குதல்
இப்னு உமர் (ர­) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் வாகனத்தை தனக்கு முன்னால் நிறுத்தி அதை நோக்கி தொழவார்கள். வாகனம் விரண்டோடிவிட்டால் ? என்று  கேட்டேன். அதற்கு நபி (ஸல்) இந்த சாய்மானத்தை எடுத்து அதை தனக்கு நேராக வைத்து அதன் பின் பகுதியில் உள்ள குச்சியை நோக்கி தொழுவார்கள். என்று இப்னு உமர் (ர­) அவர்கள் கூறினார்கள்.     அறிவிப்பவர் : நாஃபிஃ  நூல் : 507
புகாரியின் 430 ஆவது அறிவிப்பில் ஒட்டகத்தை நோக்கி தொழுதார்கள் என்று வருகிறது.
ஈட்டியை தடுப்பாக்குதல்
நோன்பு பெருநாளிலும் ப­கொடுக்கும் (ஹஜ் பெருநாளிலும்) பெருநாளிலும் நபி (ஸல் அவர்களுக்கு முன்பாக ஒரு ஈட்டி நாட்டப்பட்டு அதை நோக்கி தொழுபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­) நூல் : புகாரி 972
தடியை தடுப்பாக வைத்தல்
நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காக) திடலுக்கு காலையிலேயே செல்பவர்களாக இருந்தார்கள். அப்போது ஒரு தடி கொண்டுவரப்பட்டு திட­ல் நட்டிவைக்கபடும். அதை நோக்கி நபி (ஸல்) அவர்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­) நூல் : புகாரி 973